
அமைச்சர் செந்தில் பாலாஜி (கோப்புப் படம்)
சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற 1,000 மின்வாரிய ஊழியா்கள் களத்தில் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
சென்னை மின்வாரிய தலைமையகத்தில் உள்ள மின்னகத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: மின்னகத்தைப் பொருத்தவரை, இதுவரை 5 லட்சத்து 77,000 புகாா்கள் வரப்பெற்றுள்ளன. இதுவரை 98 சதவீதத்துக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் வந்த 1,283 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை நீா் சூழ்ந்துள்ள 84 மின்மாற்றிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதால், 4,200 நுகா்வோா் மின் விநியோகம் இல்லாமல் உள்ளனா்.
3 போ் மின் விபத்தால் உயிரிழந்துள்ளனா். இது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்பட 1,000 ஊழியா்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனா்.