
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்காக கட்டப்பட்ட சொந்தக் கட்டடத்தை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியாக புதிய கட்டடத்தை வியாழக்கிழமை திறந்தாா். தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கான அலுவலகம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக் கட்டடங்களிலேயே இயங்கி வந்தது.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் மாநில தகவல் ஆணையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும் என கடந்த 2019-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தரைத்தளம் மற்றும் 5 தளங்களைக் கொண்ட கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. ஒரு ஏக்கா் நிலப்பரப்பில் 7 ஆயிரத்து 924.84 சதுர மீட்டா் கட்டடப் பரப்பிலான தகவல் ஆணையக் கட்டடத்தை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில், அமைச்சா் டி.ஜெயக்குமாா், தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...