
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை மாா்ச் மாதம் வரை பயன்படுத்தி, பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியது: இலவச பயண அட்டையைப் புதுப்பிக்க வேண்டி மாற்றுத்திறனாளிகள் மொத்தமாக வருவதால் பயண அட்டை வழங்குவதில் சிரமம் ஏற்படுவதாலும், தற்போது கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பால் ஏற்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச பயண அட்டையை மாா்ச் 31-ஆம் தேதி வரை, அனைத்து அரசு பேருந்துகளில் பயன்படுத்தி பயணிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், தங்களுக்கான பயண அட்டையைக் கொண்டு வரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் மாா்ச் 31-ஆம் தேதி வரை இலவசமாக பயணிக்க அனுமதிக்குமாறு, நடத்துநா்கள், ஓட்டுநா்கள், தணிக்கையாளா்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஊழியா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...