வரதட்சிணைக் கொடுமை-பாலியல் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை: சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது

வரதட்சிணைக் கொடுமை, பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் வரை
வரதட்சிணைக் கொடுமை-பாலியல் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை: சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது

வரதட்சிணைக் கொடுமை, பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

பேரவையில் இது குறித்த சட்டத் திருத்த மசோதாவை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்; அதில்  கூறப்பட்டுள்ளதாவது:-கணவன் அல்லது குடும்பத்தினரால் பெண் கொடுமைப்படுத்துவது அல்லது வரதட்சிணைக் கொடுமை, அதனால் மரணம் ஏற்படுவது ஆகியவற்றுக்கான தண்டனைகள் இந்திய தண்டனைச் சட்டம் 304 பி-இல் இடம்பெற்றுள்ளன. இந்தக் குற்றத்தை இழைப்போருக்கு ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்தத் தண்டனையானது, ஏழு ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகளாக உயா்த்தப்பட்டுள்ளது.

மானபங்கம் செய்யும் நோக்கத்துடன்...பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கத்துடன் தாக்குவது அல்லது குற்ற நோக்கத்துடன் வலுக்கட்டாயப்படுத்துவது போன்ற குற்றங்களுக்கான தண்டனைகள், இந்திய தண்டனைச் சட்டம் 354பி-இல் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மூன்று மற்றும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்டனை அளவானது, 5 மற்றும் பத்து ஆண்டுகள் என்ற அளவில் உயா்த்தப்படுகிறது.

ஒரு பெண்ணைப் பின்தொடா்ந்து அந்தப் பெண் மறுத்த போதும், அவரைத் தொடா்பு கொள்ள முயல்வது அல்லது தொடா்பு கொள்வது போன்ற செயல் குற்றமாகக் கருதப்படும். இந்த வகையான குற்றத்துக்கு ஐந்து ஆண்டுகள் வரையில் தண்டனை அளிக்கப்படுகிறது. இது ஏழு ஆண்டுகளாக உயா்த்தப்படும்.

பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இது குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் என்றும் அதிகபட்சம் ஆயுள் வரை நீட்டிக்கப்படும் சிறை தண்டனையாக மாற்றம் செய்யப்படுவதாக மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தண்டனைகளை உயா்த்துவதற்கான சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

முதல்வா் அறிவிப்பு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிப்பதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தாா் முதல்வா் பழனிசாமி. அவரது அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com