கூத்தாநல்லூரில் புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
கூத்தாநல்லூரில் சைக்கிள் பேரணியை வரவேற்ற போது...
கூத்தாநல்லூரில் சைக்கிள் பேரணியை வரவேற்ற போது...

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திருவாரூர் ஒளிரவன் ஃபவுண்டேசன் சார்பில், நிறுவனர் மற்றும் தலைவர் இரா.குணசேகரன் ஏற்பாட்டின்படி, தமிழ்நாடு நுகர்வோர் பாதுக்காப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச் செயலாளர் ஆர்.ரமேஷ் முன்னிலையில், 30 மாணவர்கள் கலந்துகொண்ட  விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திருவாரூரில் தொடங்கி வந்த பேரணியை, கூத்தாநல்லூர் காவல் நிலையம் முன்பு, லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எம்.உதயகுமார், வர்த்தக சங்கத் தலைவர் கு.ரவிச்சந்திரன், செயலாளர் ஜெ.சுவாமிநாதன், நாம் மனிதர் அறக்கட்டளை மாவட்டத் தலைவர் பி.எம்.முஹம்மது சுலைமான், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றச் செயலாளர் என். செல்வராஜ், கூத்தாநல்லூர் நுகர்வோர் பாதுகாப்பு சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மைய செயலாளர் கருணாநிதி, சமூக ஆர்வலர் கோஸ்.அன்வர்தீன் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர். 

சைக்கிள் பேரணி, ஏ.ஆர். சாலை, பெரியக் கடைத்தெரு, வடபாதிமங்கலம் பிரதான சாலை, மருத்துவமனை சாலை வழியாக லெட்சுமாங்குடி பாலத்தை அடைந்தனர்.

அங்கு, குணசேகரன் பேசியதாவது:  புற்றுநோயால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, 2010 ஆம் ஆண்டு, கிடாரங்கொண்டான் தியாகராஜர் நடுநிலைப்பள்ளியில்  மாணவர்கள் மத்தியில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டு, 5 பள்ளிகளில் நடத்தப்பட்டன. தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து, திருவாரூர் முதல் புதுச்சேரி வரை, திருவாரூர் முதல் சென்னை வரையிலும் என சைக்கிள் பேரணி மேற்கொள்ளப்பட்டன. மாணவர்கள் புகையிலைப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். போதைப் பொருளுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காகத் தான், சைக்கிளில், கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. புகையிலையில் அடங்கியுள்ள நச்சுப் பொருள்களில் 300-க்கும் மேற்பட்ட நச்சுப்பொருள்கள் உள்ளன. புகையிலையை மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது. புகையிலைக்கு ஆள்பட்டவர்கள் நிச்சயமாக குணமாகலாம். புகையிலையை ஒழித்து, புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com