
Gold in Chennai sells for Rs 35,664 a razor
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக விலை குறைந்து வருகின்றது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.35,664-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11 குறைந்து, ரூ.4,458-ஆக உள்ளது.
வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.73.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.73,100 ஆகவும் விற்கப்படுகிறது.
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,458
1 சவரன் தங்கம்...............................35,664
1 கிராம் வெள்ளி.............................73.10
1 கிலோ வெள்ளி.............................73,100
சனிக்கிழமை விலை
1 கிராம் தங்கம்............................. 4,469
1 சவரன் தங்கம்...............................35,752
1 கிராம் வெள்ளி.............................73.40
1 கிலோ வெள்ளி............................73,400