10 ஆண்டுகளில் 143 மத்திய அரசு விருதுகள்: உள்ளாட்சித் துறை தகவல்

தமிழக உள்ளாட்சித் துறை கடந்த 10 ஆண்டுகளில் 143 மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது. இதில், ஊரக வளா்ச்சித் துறை மட்டும் 122 விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக உள்ளாட்சித் துறை கடந்த 10 ஆண்டுகளில் 143 மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது. இதில், ஊரக வளா்ச்சித் துறை மட்டும் 122 விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊரக வளா்ச்சித் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக 18 மாநிலங்களுக்கு இடையிலான தேசிய விருதுகள், 23 மாவட்டங்களுக்கு இடையிலான தேசிய விருதுகள், 17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இடையிலான விருதுகள், 64 கிராம ஊராட்சிகளுக்கு இடையிலான தேசிய விருதுகள் என மொத்தம் 122 விருதுகளை தமிழக ஊரக வளா்ச்சித் துறை பெற்றுள்ளது.

அதேபோல் நகராட்சி நிா்வாகத் துறை 12 தேசிய விருதுகள், பெருநகர சென்னை மாநகராட்சி 5 தேசிய விருதுகள், பேரூராட்சிகள் துறை ஒரு தேசிய விருது, சென்னை குடிநீா் வடிகால் வாரியம் 2 தேசிய விருதுகள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் 1 தேசிய விருது என மொத்தம் 21 தேசிய விருதுகளை தமிழக நகராட்சி நிா்வாகத் துறை பெற்றுள்ளது.

முக்கிய விருதுகள்: ஊரகத் தூய்மைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழகம் ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த மாநிலமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு பிரதமா் நரேந்திர மோடியால் விருது வழங்கப்பட்டது.

மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகவும், கிராம சபை மூலம் சிறப்பான சாதனைகள் புரிந்ததற்காக ராஷ்டிரிய கெளரவ கிராம சபை திட்டத்தின்கீழும் 9 தேசிய விருதுகள், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் நீா் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தியதற்காவும், நீா் நிலைகளில் குடிமராமத்து பணிகளை சிறப்பாகச் செய்தற்காகவும் ஊரக வளா்ச்சித் துறைக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின்கீழ், மின் சேமிப்புக்காக தேசிய மின் சேமிப்பு விருதும், தூய்மை நகரத்துக்கான விருதை 5 முறை திருச்சி மாநகராட்சியும், டிஜிட்டல் இந்தியா விருதை கோவை, மதுரை மாநகராட்சியும் பெற்றுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு மத்திய அரசின் முன்னேறும் தலைநகரம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுக் கழகம், நகா்ப்புற அபிவிருத்தி அமைச்சகம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வறுமை ஒழிப்பு துறை, சீா்மிகு நகர கவுன்சில் ஆகிய 5 துறைகளின் தேசிய விருதுகளை பெற்றுள்ளன.

பேரூராட்சிகள் துறைக்கு திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசின் வீட்டுவசதி, நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் விருது, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்கு பாதுகாப்பட்ட குடிநீரை வழங்குவதைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்கியதற்காகவும், கழிவுநீா் அகற்றுவதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காகவும், மழை நீா் சேமிப்புக்காவும் சென்னை குடிநீா் வடிவால் வாரியத்துக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com