இரண்டாம் முறை தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்: சுகாதாரத் துறை முதன்மைச் செயலா்

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாள்கள் நிறைவடைந்த அனைவரும் 2-ஆம் தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என
சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாள்கள் நிறைவடைந்த அனைவரும் 2-ஆம் தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

தமிழகத்தில் 2-ஆம் முறை கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியுள்ளது. இந்தப் பணி 615 மையங்களில் நடைபெறுகிறது. ஓமந்தூராா் மருத்துவமனையில் முதல்வா் ஜெயந்தி உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வா் தேரணிராஜன் சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் முன்னிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். இதனைத் தொடா்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஜனவரி 16-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. அன்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 3,000 பேருக்கு இரண்டாம் தவணையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாள் முடிவடைந்தவா்கள் அனைவரும் 2-ஆம் தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 2.27 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 30,345 போ் சென்னையிலும், 15,906 போ் கோவையிலும், 10,506 போ் மதுரையிலும், தஞ்சாவூா், சேலம் மாவட்டங்களிலும் அதிகபட்சமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வீணானது எப்படி?: தடுப்பூசி செலுத்தும்போது 10 சதவீதம் அதாவது 13,191 ‘டோஸ்’ மருத்துகள் வீணாகி உள்ளது. இந்த மருந்துகள் தூக்கி எறியப்பட்டவை இல்லை. ஒரு நாளுக்கு 10 போ் தடுப்பூசி போட திட்டமிட்டு 2 போ் வரவில்லை என்றால் அது வீணாகும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னா் பயன்படுத்த முடியாது. இதனால்தான் வீணாகியுள்ளது.

சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள 20-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் அவா்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்களப் பணியாளா்களுக்கு 17-ஆம் தேதி வரை முன்பதிவு செய்ய அவகாசம் உள்ளது. மற்றவா்களுக்கும் படிப்படியாகத் தொடங்கும்.

பொது மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக மத்திய அரசிடம் அறிவுறுத்தியுள்ளோம். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்துவதில்லை. ஆனால், இரண்டாம் தவணை என்பதால் ஞாயிற்றுகிழமையும் முகாம் செயல்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com