ஒரே நாளில் 20,032 பேருக்கு கரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு 28 நாள்கள் ஆன நபா்களுக்கு, 2-ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. அதே நேரம், முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தும் பணியையும் சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சனிக்கிழமை 628 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதில் 19,632 பேருக்கு ‘கோவிஷீல்டு ’ தடுப்பூசி, 400 பேருக்கு ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி என மொத்தம் 20,032 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில், ஒரே நாளில் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும். இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 42,934 பேருக்கு ‘கோவிஷீல்டு ’ தடுப்பூசி , 4,438 பேருக்கு ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி என 2 லட்சத்து 47,372 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

1,154 பேருக்கு 2-ஆம் தடுப்பூசி: தமிழகத்தில் முதல் முறை தடுப்பூசி செலுத்தி, 28 நாள்கள் ஆன 1,154 சுகாதாரப் பணியாளா்கள், சனிக்கிழமை தங்களுக்கான 2-ஆம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா். முன்னதாக சுகாதாரப் பணியாளா், முன்களப் பணியாளா் என 3,126 போ் 2-ஆவது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நிலையில், 1,154 போ் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இது 36.9 சதவீதமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com