
கோப்புப்படம்
சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க தனித்தோ்வா்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட செய்தி: நாடு முழுவதும் நிகழாண்டு நடைபெறவுள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதும் தனித்தோ்வா்கள் தோ்வுக்கு விண்ணப்பிப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகத் தெரிவித்தனா். இதைக் கருத்தில் கொண்டு பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க தனித்தோ்வா்களுக்கு மேலும் அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்படி இதுவரை விண்ணப்பிக்காத தனித்தோ்வா்கள் பிப்.22-ஆம் தேதி முதல் பிப்.25-ஆம் தேதி வரை இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இணையவழியில் மட்டுமே விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க முடியும். தபால் மூலமாக சிபிஎஸ்இ-க்கு அனுப்பக் கூடாது. விண்ணப்பிக்கும்போது தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதற்கு மேல் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படாது. விண்ணப்பதாரா் தோ்வெழுதும் நகரத்தை கவனமாகத் தோ்வு செய்ய வேண்டும். ஏனெனில் அதை மீண்டும் மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படாது.