புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி:  ஆளுநர் தமிழிசை ஆய்வு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போடப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த தமிழிசை செளந்தரராஜன்.
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த தமிழிசை செளந்தரராஜன்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போடப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது குறைவான அளவில் தடுப்பூசி போடப்படுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தடுப்பூசி போடப்படும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தடுப்பூசி போடப்படும் செவிலியர்களை ஊக்கப்படுத்தினார். பின்னர் அங்கு கரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ஆளுநர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் அருண்குமார், ஆளுநரின் செயலர் சுந்தரேசன், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆளுநர் கூறியதாவது:  பொறுப்பேற்றவுடன் தடுப்பூசி போடப்படும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது மாநிலத்தில் தடுப்பூசி குறைவாகவே போடப்படுவதாக தெரிவித்தனர். 

நமது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசி உலகில் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு நம்மூரில் தயக்கம் உள்ளது.  தடுப்பூசியால் பாதிப்புகள் ஏற்படுவதாக சிலர் நினைக்கிறார்கள். அது தவறு.

இப்போது விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். சிலர் கரோனா போய்விட்டதே ஏன் நான் போட வேண்டும் என்கிறார்கள்.
இப்போது போலியோ நோய் இல்லை ஆனால் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தருகிறோம்.

கரோனா நம்மோடு தான் இருக்கிறது. நம்மை சுற்றி சுற்றி வருகிறது. எனவே நாம் அவசியம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் அதிக அளவில் தடுப்பூசி போட்டு நாட்டின் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com