வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்

வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துவிட்டு பல மாதங்களாகக் காத்திருப்போரா நீங்கள்? ஒரு வேளை தேர்தலுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லை என்றால் எப்படி வாக்களிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீ
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்


சென்னை: வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்போரா நீங்கள்? ஒரு வேளை தேர்தலுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லை என்றால் எப்படி வாக்களிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலை வேண்டாம்..

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்திருப்பவர்கள், டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டையைப் பெறும் திட்டம் இந்த மாத துவக்கத்தில் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை நாம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதல்கட்டமாக இந்த வசதி, தமிழகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 21.39 லட்சம் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 16 -  டிசம்பர் 15 வரை நடத்தப்பட்ட புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாமின் போது பட்டியலில் பெயரை சேர்த்தவர்கள், அப்போது தாங்கள் வழங்கிய செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.nvsp.in/ என்ற இணையதள முகவரியில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இந்த வசதி விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இது குறித்து தற்போது புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்துள்ள 20 வயது கல்லூரி மாணவி இதுபற்றிக் கூறுகையில், எப்போதும் அதிர்ஷ்டம் என்பதைப் பற்றி நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். தற்போது என்னுடைய சகோதர சகோதரிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்திருந்தாலும் இதுவரை அடையாள அட்டை கிடைக்கவில்லை. ஆனால் நான் இந்த முறைதான் என் பெயரை சேர்த்தேன். உடனே இணையத்தின் வாயிலாக வண்ண நிறத்தில் என்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொண்டேன். அதைப் பார்த்தால் அசல் வாக்காளர் அடையாள அட்டையைப் போன்றே உள்ளது என்கிறார் உற்சாகத்தோடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com