அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட கோரிக்கைகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்: ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் திமுக ஆட்சியில் 100 நாள்களில் நிறைவேற்றப்படும் என கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
கோவையில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின்
கோவையில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் திமுக ஆட்சியில் 100 நாள்களில் நிறைவேற்றப்படும் என கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

தமிழகம் முழுவதும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, வெள்ளிக்கிழமை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியது: 

தமிழகத்தில் தற்போதைய அதிமுக ஆட்சியில் ஊராட்சிக்கு ரூ.1 கோடி வீதம், தமிழகத்தில் 12,500 ஊராட்சிகளில் ரூ.12,500 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது உறுதியாகி உள்ளது. பிளீச்சிங் பவுடர், துடைப்பம், மின்விளக்குகள் வாங்கியதில் கூட கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது. 

ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மீது, திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் நிறைவேற்றப்படும். மக்களின் புகார் மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கத் தனியாக அதிகாரிகள் குழு அமைக்கப்படும் என்றார். 

முன்னதாக,கோவை மேற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை ஸ்டாலினிடம் தெரிவித்தனர். அதில், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், சாலை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வறுமையில் வாடும் தியாகிகளின் குடும்பத்திற்கு உதவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. பையா(எ)கிருஷ்ணன், திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com