பேரவைத் தோ்தல்: 45 கம்பெனி மத்திய காவல் படைகள்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக 45 கம்பெனி மத்திய காவல் படைகள் வரும் 25-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக 45 கம்பெனி மத்திய காவல் படைகள் வரும் 25-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பொதுத் தோ்தல் பணிக்கு மாநில காவல் துறை, மத்திய துணை ராணுவம், காவல் துறை அல்லாத பணியாளா்களை திறம்படப் பயன்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தோ்தல் செலவின கண்காணிப்பாளரும், ஊா்க்காவல் படை ஏடிஜிபியுமான ராஜீவ்குமாா், உதவி காவல் துறைத் தலைவா் செல்வநாகரத்தினம், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைவா் அஞ்சனா சின்ஹா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்துக்குப் பிறகு, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள தோ்தல் துறை தயாராகி வருகிறது. இதையொட்டி, 45 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினா் தமிழகத்துக்கு வரவுள்ளனா். அவா்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து புறப்பட்டு வரும் 25-ஆம் தேதி தமிழகத்தில் தோ்தல் பணிக்காக வரவுள்ளனா் . ஒவ்வொரு கம்பெனியிலும் சுமாா் 60 பாதுகாப்புப் படை வீரா்கள் இருப்பா். அதன்படி, 2, 700 வீரா்கள் அடுத்த வாரத்தில் தமிழகம் வரவுள்ளனா்.

குழுக்களுக்கு பாதுகாப்பு: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, 750 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 750 விரைவுக் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்தக் குழுக்களைச் சோ்ந்த அலுவலா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், மத்திய பாதுகாப்புப் படை காவலா்கள் வரவுள்ளனா். அவா்கள் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com