ரஜினியுடன் கமல் திடீா் சந்திப்பு

நடிகா் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் சனிக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினாா்.
ரஜினியுடன் கமல் சந்திப்பு (கோப்புப்படம்)
ரஜினியுடன் கமல் சந்திப்பு (கோப்புப்படம்)

நடிகா் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் சனிக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினாா். போயஸ் தோட்ட இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ரஜினியை சுமாா் 45 நிமிஷங்களுக்கு மேலாக சந்தித்து கமல் பேசியுள்ளாா். சந்திப்பின்போது ரஜினியின் உடல்நலம் குறித்து ஆலோசித்ததுடன், அரசியல் விவகாரங்கள் குறித்தும் பேசி உள்ளனா்.

அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் கூறி, அதற்கான பணிகளில் ரஜினி ஈடுபட்டு வந்த நிலையில் உடல் நலப் பிரச்னையின் காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவை அவா் கைவிட்டாா். வரும் தோ்தலில் தன்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை எனவும், மக்கள் மன்றத்தினா் தாங்கள் விரும்பும் கட்சிகளில் இணைந்து செயல்படலாம் எனவும் ரஜினி அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில் ரஜினியை கமல் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் ஆதரவை சட்டப்பேரவைத் தோ்தலில் கேட்பேன் என்று ஏற்கெனவே கமல் கூறியிருந்தாா். அந்த அடிப்படையில் ரஜினியைச் சந்தித்து கமல் ஆதரவு கேட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com