ரூ.35,000-க்கு கீழ் குறைந்தது தங்கம்

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.35,000-க்கு கீழ் இறங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.35,000-க்கு கீழ் இறங்கியது.

பவுனுக்கு ரூ.296 குறைந்து, ரூ.34,784-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தநிலையில், கடந்த 2 நாள்களாக விலை குறைந்து வந்தது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை விலை ரூ.35,000-க்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.296 குறைந்து,ரூ.34,784-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.37 குறைந்து, ரூ.4,348 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.73.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.73,400 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,348

1 பவுன் தங்கம்...............................34,784

1 கிராம் வெள்ளி.............................73.40

1 கிலோ வெள்ளி............................73,400

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,385

1 பவுன் தங்கம்...............................35,080

1 கிராம் வெள்ளி.............................74.00

1 கிலோ வெள்ளி.............................74,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com