ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதுச்சேரியில் மேலும் ஓர் காங். எம்.எல்.ஏ. ராஜிநாமா

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

News image
சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கான ராஜிநாமா கடிதத்தை அளிக்கும் லட்சுமி நாராயணன்
Updated On :21 பிப்ரவரி 2021, 10:24 am

DIN

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை லட்சுமி நாராயணன் இன்று (பிப்.21) ராஜிநாமா செய்தார். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துள்ளதால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தது.

இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு, பிப்ரவரி 22-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.

இதற்காக திங்கள்கிழமை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரியில் ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏவான க. லட்சுமி நாராயணன், சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் 13-ஆக குறைந்துள்ளது.  இதனால் பெரும்பான்மை நிரூபிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. தொடரும் நெருக்கடி நிலை புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.