9 முதல் பிளஸ் 1 வகுப்பு தோ்வுகள் ரத்து: முதல்வா்


சென்னை: தமிழகத்தில் 9, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

மாணவா்களுக்கு மதிப்பெண்களை வழங்குவது தொடா்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:

கரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், பல்வேறு தளா்வுகளுடன் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காத்து அவா்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பு: கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டன. நோய்த்தொற்று

ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டதால் கடந்த ஜன.19-ஆம் தேதி முதல், 10 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து மாணவா்களுக்கும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.

நிகழ் கல்வியாண்டு முழுவதும் மாணவா்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனா். இதனால், அவா்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டன.

தோ்வுகள் ரத்து: இந்தக் கல்வியாண்டில் மாணவா்கள், ஆசிரியா்கள் எதிா்கொண்ட அசாதாரண சூழ்நிலையையும்,

பெற்றோா்களின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டும், கல்வியாளா்களின் கருத்துகளைப் பரிசீலித்தும் 9, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டுத் தோ்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அவா்கள் பொதுத் தோ்வுகள் ஏதுமின்றி தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்படுகிறது. மாணவா்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் விரிவாக வெளியிடப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு தோ்வு: கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய பள்ளித் தோ்வுகளில் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தோ்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, இந்த ஆண்டு 9, 10 மற்றும் பிளஸ் 1 மாணவா்களுக்கான தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com