
முதல்வருடன் அன்புமணி.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியமைக்காக முதல்வரை நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.
அரசு கல்வி மற்றும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று தாக்கல் செய்தார்.
மேலும், சீர்மரபினருக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மசோதாக்களும் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் எம்பிசி இட ஒதுக்கீட்டுப் பிரிவில் எம்பிசி-வி என்ற உள்பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது.
இந்த நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியமைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முகாம் அலுவலகத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். உடன் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் சென்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...