
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் ஜல்லிக்கட்டு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியைக் கோட்டாட்சியர் எம். வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஏறத்தாழ 750 காளைகள் வரப்பெற்றதைத் தொடர்ந்து, அவற்றை கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பட்டியிலிருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
இவற்றைப் பிடிப்பதற்காக சுமார் 450 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் முதல் கட்டமாக 50 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சில்வர் பாத்திரங்கள், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...