
கோப்புப்படம்
திருச்சிராப்பள்ளி-பாலக்காடு, விழுப்புரம்-திருப்பதி, ஈரோடு-சென்னை உள்ளிட்ட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருச்சி-பாலக்காடு: திருச்சிராப்பள்ளியில் இருந்து தினசரி மதியம் 1 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06843) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.35 மணிக்கு பாலக்காடு டவுணை அடையும். இந்தரயிலின் சேவை ஜனவரி 6-ஆம்தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, பாலக்காட்டில் இருந்து தினசரி காலை 6.30 மணிக்கு விரைவு சிறப்பு ரயில் (06844) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.50 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 7-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
விழுப்புரம்-திருப்பதி:
விழுப்புரத்தில் இருந்து தினசரி அதிகாலை 5.25 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06854) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 6-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, திருப்பதியில் இருந்து தினசரி நண்பகல் 12.35 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06853) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.15 மணிக்கு விழுப்புரத்தை அடையும்.
ஈரோடு-சென்னை சென்ட்ரல்:
ஈரோட்டில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(02650) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்தரயிலின் சேவை ஜனவரி 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி இரவு 10.40 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02649) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு ஈரோட்டை சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 11-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுதவிர, எா்ணாகுளம்-கேஎஸ்ஆா் பெங்களூரு, திருவனந்தபுரம்-ஹஸ்ரத் நிஜாமுதின், ஆலப்புழா-கண்ணூா் ஆகிய வழித்தடங்களிலும் சிறப்புரயில்கள் இயக்கப்படவுள்ளன. முழுவதும் முன்பதிவு பெட்டிகைளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.