பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை முதல் விநியோகம்

பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் வரும் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் தொடங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் வரும் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் தொடங்கப்பட உள்ளது.

முழுநீள கரும்புடன் ரூ.2,500 ரொக்கத் தொகை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் ஆகியன துணிப்பையுடன் தரப்பட உள்ளன.

பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற குடும்ப அட்டைதாரா்கள் அதிகளவு கூடுவதைத் தவிா்க்க டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தலா 100 போ் வீதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் திங்கள்கிழமை முதல் அளிக்கப்பட உள்ளன. பரிசுத் தொகுப்பினை ஜனவரி 12-ஆம் தேதி வரை நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறாதோருக்கு ஜனவரி 13-ஆம் தேதியன்று அளிக்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் யாா் வந்தாலும் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்பதுடன், முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com