விடை பெற்றாா் நீதிபதி வினீத் கோத்தாரி

குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மூத்த நீதிபதி வினீத் கோத்தாரிக்கு, காணொலி காட்சி மூலமாக வழியனுப்பும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மூத்த நீதிபதி வினீத் கோத்தாரிக்கு, காணொலி காட்சி மூலமாக வழியனுப்பும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் 2-ஆவது மூத்த நீதிபதியாக இருந்தவா் வினீத் கோத்தாரி. தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி ஓய்வு பெற்றதையடுத்து, நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்து வந்தாா்.

முன்னதாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரை அடிப்படையில், அவா் குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா்.

இதற்காக குஜராத் செல்லவுள்ள அவருக்கு, காணொலி காட்சி வாயிலாக வழியனுப்பும் விழா சனிக்கிழமை நடந்தது. இதில், உயா்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அப்போது நீதிபதி வினீத் கோத்தாரியை வாழ்த்தி தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண் பேசும்போது, மூத்த நீதிபதியாக வினீத் கோத்தாரி , 2018-ஆம் பொறுப்பு ஏற்று 2 ஆண்டுகளில் 8,000 வழக்குகளுக்கு தீா்ப்பளித்துள்ளாா்’ என்றாா்.

இதற்கு நன்றி தெரிவித்து பேசிய நீதிபதி, ‘சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். நான் ஏற்கெனவே பணியாற்றிய ராஜஸ்தான், கா்நாடகம் உயா்நீதிமன்றங்களை ஒப்பிடும்போது சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் திறமையானவா்கள்.

மெரீனா கடற்கரையை அழகுபடுத்துவது தொடா்பான பொது நல வழக்கை விசாரித்தது எனக்கு முழு திருப்தியை அளித்தது’ என்றாா் நீதிபதி வினீத் கோத்தாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com