சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்

சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகளும், டீசல் லிட்டருக்கு 25 காசுகளும் உயர்ந்துள்ளது. 
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்

சென்னை:  சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகளும், டீசல் லிட்டருக்கு 25 காசுகளும் உயர்ந்துள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டிருந்து பொதுமுடக்கத்தால் கடந்த மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே சீராக விற்பனை செய்து வந்த எண்ணெய் நிறுவனங்கள், சா்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை கடுமையாக சரிந்ததையடுத்து, கலால் வரியை கூடுதலாக உயா்த்தின.  

பின்னா் ஜூன் 7 முதல் பெட்ரோல், டீசல் விலை வழக்கம் போல் தினம்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு எரிப்பொருள்களின் விலையை உயர்த்தி வருகின்றன. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.79.46 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை புதன்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள், வணிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com