திருவாரூர்: கூத்தாநல்லூர் வட்டத்தில் 19.5 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்

கூத்தாநல்லூர் வட்டத்தில் 55 வருவாய் கிராமங்களிலும், 19,571 ஏக்கர் நெல் பயிர் சேதம் அடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 
சேதமடைந்த நெல் பயிர்கள்
சேதமடைந்த நெல் பயிர்கள்

திருவாரூர்: கூத்தாநல்லூர் வட்டத்தில் 55 வருவாய் கிராமங்களிலும், 19,571 ஏக்கர் நெல் பயிர் சேதம் அடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதங்களில் பெய்த வடக்கிழக்கு பருவ மழையால், பெரும் பகுதியான விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் கவலையடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு தீர்மானித்தது. அதன்படி, கூத்தாநல்லூர் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவின்படி, வடபாதிமங்கலம், கமலாபுரம் மற்றும் கூத்தாநல்லூர் உள்ளிட்ட 3 பிர்க்காவிலும் உள்ள 55 கிராமங்களிலும், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்  பாதிக்கப்பட்ட நெல் பயிர்கள் குறித்த கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். 

இது குறித்து, வட்டாட்சியர் அலுவலக அலுவலர் கூறியது, கூத்தாநல்லூர் வட்டத்தில், மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் வேளாண் வட்டாரத்திற்கு உட்பட்ட 17 கிராமங்களில், பயிர் செய்யப்பட்ட 7,898 ஏக்கர் நிலத்தில், 5,159 ஏக்கர் பயிர் சேதம் அடைந்துள்ளது. 

மன்னார்குடி, கோட்டூர் வேளாண் வட்டாரத்திற்குட்பட்ட 23 கிராமங்களில், பயிர் செய்யப்பட்ட 13,169 ஏக்கரில், 9,650 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

மேலும், கொரடாச்சேரி வேளாண் வட்டாரத்திற்குட்பட்ட 15 கிராமங்களில், பயிர் செய்யப்பட்ட 7,687 ஏக்கரில், 4,762 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 

கூத்தாநல்லூர் வட்டத்தில், பயிர் செய்யப்பட்ட 28,754 ஏக்கரில், 19,571 ஏக்கர் பயிர்கள்  சேதம் அடைந்துள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com