காருண்யா பல்கலைக்கழகத்தில் மூன்றாவது நாளாக சோதனை

கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட 25 இடங்களில் வருமான வரித் துறை சோதனை மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. 
காருண்யா பல்கலைக்கழகத்தில் மூன்றாவது நாளாக சோதனை



சென்னை/ கோவை: கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட 25 இடங்களில் வருமான வரித் துறை சோதனை மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. 

சென்னையைச் சோ்ந்த பால் தினகரன் ‘இயேசு அழைக்கிறாா்’ என்ற பெயரில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறாா். அவருடைய நிறுவனங்கள் மீது வந்த வரி ஏய்ப்பு புகாா்களின் அடிப்படையில் 28 இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தினா். நேற்று வியாழக்கிழமை  25 இடங்களில் சோதனை நடத்தினர். 

தொடரும் சோதனை: இந்நிலையில், மூன்றாவது நாளாக சென்னை, கோவை உள்ளிட்ட 25 இடங்களில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை நடைபெற்று வருகிறது. 

கிறிஸ்தவ மத பிரசாரத்துக்கு வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் நன்கொடையை பால் தினகரன் குறைத்துக் காட்டியிருப்பதும், செலவினத்தை அதிகமாகக் காட்டியிருப்பதும் வருமான வரித் துறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த நிதியை வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவை சட்டப்பூா்வமானது தானா என வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சோதனையின்போது பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து பால் தினகரன் கனடாவில் இருந்து நாடு திரும்பியதும் விசாரணை நடத்த வருமான வரித் துறையினா் திட்டமிட்டுள்ளனா். 

அதேவேளையில், சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட பணம், நகை, ஆவணங்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com