
தமிழக பேரவை தேர்தலுக்கு ரூ.744 கோடி செலவு: அரசாணை வெளியீடு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த ரூ.744 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளுடன் வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ரூ.744 கோடி செலவிடப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பேரவைத் தேர்தலுக்கு ரூ.618 கோடியும், தொலைபேசி, எரிபொருள், வாடகை வாகனம், விளம்பரம் உள்ளிட்ட செலவினமாக ரூ.126 கோடியும் செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.