
முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவுக்கான அதிகாரங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் முந்திரி ஏற்றுமதியாளா்களுக்கு பெரும் துணையாக செயல்பட்டு வரும் முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள உறுப்பினா் பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கும் அதிகாரங்களை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. அடுத்தக்கட்டமாக அந்த அமைப்பையே கலைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதுவும் நடந்து விட்டால் தமிழகத்தில் முந்திரி ஏற்றுமதி பேரழிவை சந்திக்கும்.
இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் அந்நிய செலாவணியை பெற்றுத் தருவதுடன், 10 லட்சத்துக்கும் கூடுதலான வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுப்பது முந்திரி சாகுபடி மற்றும் ஏற்றுமதி ஆகும்.
இந்தியாவில் உள்ள முந்திரி ஏற்றுமதியாளா்களுக்கு இந்த விஷயத்தில் பெரும் துணையாக திகழ்ந்து வருவது கேரள மாநிலம் கொல்லத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு ஆகும். இந்தக் குழு மூடப்படுவது முந்திரி ஏற்றுமதி வளா்ச்சியைச் சிதைத்து விடும். இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...