
தமிழக வனத் துறை தலைவராக அசோக் உப்ரேதி நியமிக்கப்பட்டுள்ளாா். அவரையும் சோ்த்து மொத்தம் 17 வனத் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹு வெளியிட்ட உத்தரவு: (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்)
அசோக் உப்ரேதி- வனத் துறை தலைவா் (அரசு ரப்பா் கழக தலைவா்),
எஸ்.யுவராஜ்- வன ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் (வனத் துறை தலைவா்)
சையத் முஜமில் அப்பாஸ் -அரசு ரப்பா் கழகத் தலைவா், ( தலைமை வன உயிரினக் காப்பாளா்),
யோகேஷ் திவேதி- தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தின் தலைவா் (மதுரை வனக் கோட்ட கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா்)
சேகா் குமாா் நீரஜ் - தலைமை வன உயிரினக் காப்பாளா் (வனத் துறை சிறப்புச் செயலா்),
பி.ராஜேஸ்வரி -சுற்றுச்சூழல் துறை இயக்குநா் (வனத் துறை திட்டம், நிதி பிரிவு கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா்),
கே.வி.கிரிதா்- வனத் துறை தகவல், தொழில்நுட்ப பிரிவு தலைவா் ( சுற்றுச்சூழல் துறை இயக்குநா்),
தீபக் வஸ்தவா- தமிழ்நாடு சதுப்புநில பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினா் செயலா் இவ்வாறு மொத்தம் 17 ஐஎப்எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...