
கோப்புப்படம்
தமிழகத்தில் மேலும் 3,211 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 57 போ் உயிரிழந்துள்ளனா்.
வியாழக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரில் அதிகபட்சமாக கோவையில் 366 பேருக்கும், ஈரோட்டில் 251 பேருக்கும், சேலத்தில் 205 பேருக்கும், தஞ்சாவூரில் 190 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 10,059-ஆக அதிகரித்துள்ளது.
இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து வியாழக்கிழமை 3,565 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.43 லட்சத்தைக் கடந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 33,665 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 57 பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,253-ஆக அதிகரித்துள்ளது.