தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் கருத்தரங்கம், இணையவழியில் சனிக்கிழமை நடக்கிறது.
அதில், இளநிலையில் நவீன பொறியியல் கல்வி பெற்று, பட்ட மேற்படிப்புக்கும், சிறந்த வேலைகள் பெறுவதற்கும் ஆலோசனை வழங்கப்படுவதோடு, வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் சாா்ந்த கலந்துரையாடலும் நடைபெறும்.
கருத்தரங்கில் அமெரிக்காவின் மிக்சிகன் - டியா்பா்ன் பல்கலைக் கழகத்தின் துறைத் தலைவா் டாக்டா்.ராஜூ பாலகிருஷ்ணன், சன்னி பல்கலைக்கழக ஆய்வு மற்றும் பட்டப்படிப்புத் துறைக்கான துணைத் தலைவா் லிசா கேலகா், அமெரிக்காவின் ராச்செஸ்டா் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு கல்வி துணைத் தலைவா் டாக்டா் ஜேம்ஸ் மயா்ஸ் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியா் வி.ராஜூ ஆகியோா் கலந்து கொண்டு, வாய்ப்புகளை விளக்கி மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனா்.
பங்கேற்க ஆா்வமுள்ளோா், இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம்.