
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலா்கள் இருவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.தியாகராஜன் திருவாரூா் மாவட்டத்துக்கும், திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.ராமன் அரியலூா் மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ளாா். பணியிட மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.