
தமிழகத்தில் இன்று மேலும் 3,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,039 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 349 பேருக்கும், ஈரோட்டில் 230 பேருக்கும், சேலத்தில் 191 பேருக்கும், தஞ்சாவூரில் 179 பேருக்கும், திருப்பூரில் 176 பேருக்கும், சென்னையில் 180 பேருக்கும், பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,13,098 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 69 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 33,322ஆக உயர்ந்துள்ளது. மற்றொரு புறம் நோய்த் தொற்றிலிருந்து இன்று 3,411 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24,46,552ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 33,224 போ் உள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் 1,51,631 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.