
கம்பத்தில் 135 பேர்களுக்கு தாலிக்கு தங்கம்: ஆட்சியர் வழங்கினார்
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் 135 பேர்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கே.வீ.முரளிதரன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
தேனி மாவட்டம் கம்பம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தாலிக்கு தங்கம் என திருமண உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.ராமக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார், தேனி மாவட்ட ஆட்சியர் கே.வீ.முரளிதரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியது, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சார்ந்த பயனாளிகள் 135 பேருக்கு திருமண நிதியுதவியாக ரூபாய் 33 லட்சத்து 75 ஆயிரமும், 1,080 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் பழனிமணி கணேசன், நிவேதா அண்ணாத்துரை, மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.