கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு திருச்சி சிவா எம்.பி. கடிதம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருச்சி எம்பி சிவா கடிதம் எழுதியுள்ளார். 
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு திருச்சி சிவா எம்.பி. கடிதம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருச்சி எம்பி சிவா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஒரு மொழிப் பாடமாக இல்லாததை ஏற்கனவே மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி., எழுப்பியதற்கு, அக்குறையைத் தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அப்போதைய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். 
இந்நிலையில் “அண்மையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை சி.பி.எஸ்.இ., இணையத்தில் தரவிறக்கிக் கொள்ள பதிவேற்றம் செய்த போது அதில் தமிழ் விடுபட்டுள்ளது. மேலும், 11, 12-ஆம் வகுப்பில் ஒரு மாணவர் தாய்மொழியை (தமிழ்) இரண்டாவது மொழியாகப் படிப்பதற்குப் பதில் ‘பயன்பாட்டுக் கணிதவியல்’ போன்ற துணைப் பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதும் தாய்மொழியைப் பயில்வதைத் தவிர்க்கச் செய்வதாக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ளூர் மாணவர்கள் தங்கள் தாய்மொழியைப் பயில்வதற்குரிய வகையில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி புதிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவா எம்.பி., நேற்று கடிதம் எழுதியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com