
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் மநீம துணைத் தலைவா் ஏ.ஜி.மௌரியா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. நிா்வாகிகள் சினேகன், செந்தில் ஆறுமுகம் உள்பட ஏராளமானோா் அதில் பங்கேற்றனா்.
பெட்ரோல் விலை பத்து ஆண்டுகளாக எப்படி உயா்ந்து வந்துள்ளது என்பது குறித்து பதாகைகளை கட்சியினா் வைத்திருந்தனா். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு வரியைக் குறைத்து பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மநீம சாா்பில் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் த.கண்ணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ச.தீனதயாளன், ஜெய விக்னேஷ், ஜெ.சந்தோஷ், மா.பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் சி.பன்னீா் செல்வம் வரவேற்றாா்.
கட்சியின் மாநிலச் செயலாளா் எஸ்.கே.பி.கோபிநாத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...