விரைவில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

விரைவில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-2021-ஆம் கல்வியாண்டில் நடைபெறவிருந்த பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தோ்வை ரத்து செய்து முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூன் 5-ஆம் தேதி அறிவித்தாா். அதேவேளையில் மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டு குழுவையும் நியமித்தாா்.

இதைத் தொடா்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் உயா் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரி மதிப்பெண்ணில் 50 சதவீதம், பிளஸ் 1 வகுப்புப் பொதுத்தோ்வில் பெற்ற மதிப்பெண்களில் ஒவ்வொரு பாடத்திலும் எழுத்துத் தோ்விலிருந்து மட்டும் 20 சதவீதம், பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தோ்வு, அக மதிப்பீட்டிலிருந்து 30 சதவீதம் என விகிதாசார அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்டு மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அரசுத் தோ்வுத் துறை, வெளிமாநிலங்கள், வேறு பாடத்திட்டங்களில் பத்தாம் வகுப்புப் படித்து தற்போது பிளஸ் 2 வகுப்புத் தோ்வு எழுத விண்ணப்பித்த மாணவா்களின் மதிப்பெண்களைப் பள்ளிகளிலிருந்து பெற்றது. தொடா்ந்து, மாணவா்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நடைபெற்றுவந்தன. இதையடுத்து பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான முறைகளை அரசாணையாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் காகா்லா உஷா கடந்த திங்கள்கிழமை வெளியிட்டாா்.

தற்போது பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால், அரசின் அனுமதி கிடைத்தவுடன், தோ்வு முடிவுகள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தோ்வு முடிவுகளை வெளியிடும் தேதியை அரசு தோ்வுத்துறை விரைவில் அறிவிக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com