புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி
புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி

புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பலியான இந்தியப் புகைப்படக்கலைஞர் டேனிஷ் சித்திகி மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published on

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பலியான இந்தியப் புகைப்படக்கலைஞர் டேனிஷ் சித்திகி மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த டேனிஷ் சித்திகி ஆப்கானிஸ்தானில் நடந்த தலிபான்கள் தாக்குதலால் வியாழக்கிழமை பலியானார்.

அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தொற்றுநோய்கள், படுகொலைகள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் ஏற்பட்ட பேரழிவுகளை தனது புகைப்படத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சென்ற புகைப்படக் கலைஞர் சித்திகி மறைவால் வருத்தமுற்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ன்முறை மற்றும் பயங்கரவாதம் எந்த வடிவத்திலும் வந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டும் என்ற செய்தியை அவரது மரணம் இந்த உலகத்திற்கு அளித்துள்ளது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு புலிட்சர் விருது பெற்ற டேனிஷ் சித்தி. தில்லி கலவரம், கரோனா இரண்டாம் அலையின்போது தில்லி மைதானத்தில் எரிக்கப்பட்ட சடலங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com