
ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 34 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து ஆவின் நிா்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தலைமை அலுவலகத்தில் பொது மேலாளராகப் பணியாற்றி வரும் ரமேஷ்குமாா் விழுப்புரத்துக்கும், துணைப் பொது மேலாளராகப் பணியாற்றி வரும் முத்துக்குமரன், இணை மேலாண்மை இயக்குநா் அலுவலகத்துக்கும், இணை மேலாண்மை இயக்குநா் அலுவலகத்தில் துணை பொதுமேலாளராகப் பணியாற்றிவரும் அன்புமணி தலைமை அலுவலகத்துக்கும் என தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 34 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என கூறப்பட்டுள்ளது.