சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகளை விற்க அனுமதிக்க வேண்டும்: சிற்பக் கலைஞர்கள் வலியுறுத்தல்

நிகழாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகளை  விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டுமென முதல்வருக்கு சிற்பகலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வேண்டும்: சிற்பக் கலைஞர்கள் கோரிக்கை
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வேண்டும்: சிற்பக் கலைஞர்கள் கோரிக்கை

சங்ககிரி: நிகழாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகளை  விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டுமென முதல்வருக்கு சிற்பகலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிகழாண்டு செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி  நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.  கடந்த வருடம் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அரசு அனுமதிக்கவில்லை.  கடந்த வருடம் செய்யப்பட்ட சிலைகளை சிற்பக்கலைஞர்களின் குடும்ப நிலைகளை கருத்தில் கொண்டு நிகழாண்டு விழாவிற்கு விற்பனை செய்ய அரசு அனுமதியளிக்க வேண்டுமென முதல்வருக்கு சிற்பக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சங்ககிரி வட்டம், தேவூர் அரசிராமணி செட்டிப்பட்டி அருகே உள்ள மோட்டூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சிற்ப கலைஞர் சின்னசக்தி  தலைமையில் கிராமப்புற பெண்கள், பட்டதாரிகள், கைவினைஞர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பணிகளில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.  சிலைகளை  கிழங்குமாவு,  பழைய நாளிதழ்கள், களிமண் மற்றும் இரசாயணம் கலக்காத வர்ணங்களை அடித்தும்  ஆற்றில் கரைக்கும் போது இயற்கை பாதிக்காத வகையில் எளிதில் நீரில் கரையக்கூடிய வகையில் ரூபாய் 100 முதல் ரூ.25 ஆயிரம் வரை விலையுள்ள அரை அடி முதல் 15 அடி வரை உள்ள சுமார் 35  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை கடந்த வருடம் விற்பனைக்காக செய்துள்ளனர்.  

ஒவ்வொரு வருடமும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாகனங்களில் வந்து சிலைகளை விலைக்கு வாங்கிச் சென்று வழிப்பட்டு வருகின்றனர்.  கடந்த 2020ம் வருடம் கரோனாதொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி  பொது இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளிகளை கடைபிடிக்கவும், தொற்று பரவாமல் தடுப்பதற்கும் விநாயர்சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும் அதனை நீர் நிலைகளில் கரைக்கவும் அரசு தடைவிதித்து அவரவர் இல்லங்களில் வழிபாடு செய்ய அறிவுறுத்தியது. அதனையடுத்து கடந்த வருடம் தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்பனை செய்ய முடியாமல் கைவினைஞர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்தினரும் சிரமத்திற்குள்ளாகினர்.  

எனவே சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிற்பக் கூடங்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் இல்லங்களில் கடந்த வருடம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யாமல் உள்ள சிலைகளை நிகழாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு  விற்பனை செய்ய தமிழகரசு அனுமதிக்க வேண்டுமென முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து தேவூரை அடுத்த அரசிராமணி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த சிற்பக்கலைஞர் சின்னசக்தி கூறியது:

கடந்த பத்து வருடங்களாக  விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக எங்கள் ஊரைச் சேர்ந்த 25 குடும்பங்கள் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த வருடம் சிலை தயாரிப்புக்காக வீட்டில் உள்ள நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்தும், நண்பர்களிடம் கடன்கள் பெற்றும் இத்தொழிலை செய்து வந்தோம். அதனையடுத்து கடந்த வருடம் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைக்காக சிலைகள் விற்பனைக்கு அரசு அனுமதியளிக்கவில்லை.  கடந்த வருடம் சிலைகள் விற்பனையாகாததால் கடந்த வருடம்  ரூ.55 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழாவில் விற்கப்படும் சிலைகளின் தொகையில் எங்கள் ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பட்ட மேற்படிப்பு படிக்கும் ஒரு குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி பயில உதவி செய்து வருகிறேன்.  கடந்த வருடம் ஏற்பட்ட நஷ்டத்தினால் அவர்களுக்கு உதவ இயலாத நிலையில் உள்ளேன்.  கடந்த வருடம் விற்பனைக்காக செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிழாண்டு விழாவிற்காக விற்பனை செய்ய அரசு அனுமதியளித்தால் தான் சிலைகள் தயாரிப்பு  பணியில் ஈடுபட்டு வரும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக அமையும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com