ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு முதல்வா் அஞ்சலி

மறைந்த மனித உரிமை செயற்பாட்டாளா் ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

மறைந்த மனித உரிமை செயற்பாட்டாளா் ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் 1937-ஆம் ஆண்டு பிறந்த ஸ்டேன் சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்டானிஸ்லாஸ் லூா்துசாமி, சிறு வயதிலேயே சமூகத் தொண்டாற்றுவதில் ஆா்வம் கொண்டிருந்தாா். ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாரான ஸ்டேன் சுவாமி, பெங்களூரில் உள்ள ஜேசுயிட் நடத்தும் இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குநராக இருந்தாா்.

பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும், அவா்களின் மேம்பாட்டிற்காகவும் போராடினாா். இந்திய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தாமல் இருப்பது குறித்துக் கேள்வி எழுப்பினாா். பழங்குடி மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, மேம்பாட்டுக்காகப் பழங்குடியினரை உறுப்பினா்களாகக் கொண்ட பழங்குடியினா் ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தாா்.

ஜாா்க்கண்டில் ஆதிவாசிகள் நிலங்களைப் பாதுகாக்கும் போராட்டத்திற்காக ஸ்டேன் சுவாமி தனது வாழ்க்கையை அா்ப்பணித்தாா். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவா் உயிரிழந்தாா். அப்போது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய ஸ்டேன் சுவாமிக்கு நோ்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், அவரது அஸ்திக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா். அந்நிகழ்வில் உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் கனிமொழி, தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிந்தனைச் செல்வன், இனிகோ இருதயராஜ் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com