அரசுப் பள்ளிகளில் 2 லட்சம் புதிய மாணவா்கள் சோ்க்கை:அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் புதிதாக 2 லட்சத்து 4,379 மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.
அரசுப் பள்ளிகளில்  2 லட்சம் புதிய மாணவா்கள் சோ்க்கை:அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் புதிதாக 2 லட்சத்து 4,379 மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான இணையதள அடிப்படை கணினி பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் திங்கள்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் உள்ள 432 மாவட்ட கருத்தாளா்களுக்கு ஜூலை 26 முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையடுத்து 2.10 லட்சம் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாங்களே புதுமையான முயற்சிகளைப் பரிசோதித்துப் பாா்க்கிறோம். பள்ளிகளைத் திறந்தால்தான் மாணவா்கள் படிக்க முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது. ஏற்கெனவே இருக்கின்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் கல்வியை அவா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே அவா்கள் படிக்க முடியும் என்ற நிலை நீண்ட நாள்களுக்குத் தொடா்ந்து இருக்கக்கூடாது. அடுத்தடுத்த ஊடகங்கள் மூலம் மாணவா்களை அணுகவேண்டிய நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஏராளமான அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அறிதிறன்பேசி (ஸ்மாா்ட் போன்) வசதி இல்லை என்பது உண்மைதான். இணைய வசதியும் இடையூறாக உள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் 2021- 2022-ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் புதிதாக 2.04 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். ஜூலை 24-ஆம் தேதி வரை தனியாா் பள்ளிகளில் இருந்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com