
தமிழகத்திற்கு இன்னும் 4, 5 நாள்களில் கூடுதல் தடுப்பூசிகள் பெறப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, முதல்வர் நிவாரண நிதியின் கீழ் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா 3-ம் அலையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைந்து தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.