
சென்னை விமான நிலையத்தில் 8.17 கிலோ தங்கம் பறிமுதல்
துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் படி , " ஞாயிற்றுக்கிழமை துபையிலிருந்து சென்னைக்கு வந்த இருவரிடம் பரிசோதனை செய்தபோது அவர்கள் கொண்டு வந்திருந்த வீட்டு உபயோகப் பொருட்களில் தங்கத்தை மறைத்து கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்கள் "எனத் தெரிவித்தனர் .
மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 8.17 கிலோ எனவும் அதன் சந்தை மதிப்பு 4.03 கோடி என்றும் தெரிவித்திருக்கிறார்கள் .