
சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் பெருமளவில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை செயலாளர் திங்கள்கிழமை பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்தக் கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சுகாதாரத்துறை செயலாளர் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில்,
தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் பல இடங்களில் பெருமளவில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 2,715 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 402 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் மாதத்தில் 54 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.