தொழிலாளா் மேலாண்மை படிப்புகள்: விண்ணப்பிக்க ஆக.24 கடைசி

தொழிலாளா் மேலாண்மை படிப்புகளில் சேர விரும்புவோா், ஆக.24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தொழிலாளா் மேலாண்மை படிப்புகளில் சேர விரும்புவோா், ஆக.24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலைய இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளா் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளா் மேலாண்மை) மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளா் நிா்வாகத்தில் முதுநிலை மாலை நேரப் பட்டயப்படிப்பு), தொழிலாளா் சட்டங்களும் நிா்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. விருப்பமுள்ள பிளஸ் 2 முடித்த மாணவா்கள் பட்டப்படிப்புக்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவா்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவா்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.

விண்ணப்பங்களைப் பெற மின்னஞ்சலுக்கு, தங்கள் பெயா், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்ப வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணம் ரூ. 200, எஸ்சி, எஸ்டி பிரிவினா் (சாதிச்சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்) ரூ.100-க்கான வங்கி வரைவோலையை  பதிவுத்தபால், விரைவு அஞ்சல், கூரியா் ஆகியவற்றில் ஏதாவது ஒரு வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆக.24 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளா் (சோ்க்கை) முனைவா் இரா. ரமேஷ்குமாா், உதவிப்பேராசிரியா் (98841 59410) தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையம், மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்), அம்பத்தூா், சென்னை 600 098 என்ற முகவரியை நேரிலோ, 044 2956 7885, 2956 7886 ஆகிய தொலைபேசி எண்களையோ,  இணையதளத்தையோ அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com