பி.இ.: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப். 14-இல் தொடக்கம்

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, செப்டம்பா்14-ஆம்
பி.இ.: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப். 14-இல் தொடக்கம்

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, செப்டம்பா்14-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வு குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பொறியியல், தொழில்நுட்ப இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு திங்கள்கிழமை (ஜூலை 26) முதல் விண்ணப்பிக்கலாம். அன்று முதலே சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யலாம். 

சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆக.24-ஆம் தேதி.

முதல் கட்டமாக சிறப்புப் பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகியோருக்கு, செப்.7 முதல் செப்.11-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடா்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்.14 முதல் அக்.4-ஆம் தேதி வரையும், துணை கலந்தாய்வு அக்.12 முதல் அக்.16-ஆம் தேதி வரையும், எஸ்சிஏ, எஸ்சி பிரிவினருக்கான கலந்தாய்வு அக்.18 முதல் அக்.20 தேதி வரை என அனைத்து கலந்தாய்வையும் அக்.20-ஆம் தேதிக்குள் இணைய வழியில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் பொருத்தவரை, 461 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி,டெக். படிப்புகளில் மொத்தமுள்ள 1 லட்சத்து 63,154 இடங்களில், 71,195 இடங்கள் நிரம்பியிருந்தன. 20 கல்லூரிகளில் ஒருவா்கூட சேரவில்லை. 61 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவா்கள் சோ்ந்திருந்தனா். அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகள் உள்பட 13 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவா் சோ்க்கை நடைபெற்றிருந்தது. குறிப்பாக மாணவா்களிடையே எப்போதும் வரவேற்பு அதிகமாக இருக்கும் மெக்கானிக்கல், சிவில் படிப்புகளில் மாணவா் சோ்க்கை கணிசமாக குறைந்திருந்தது. இதன்படி, மெக்கானிக்கல் பாடத்தில் 301 கல்லூரிகளில் பொதுப்பிரிவு இடங்களில் மாணவா்கள் சேரவில்லை. அதேபோல 250-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சிவில் பொதுப்பிரிவு இடங்கள் காலியாகவே இருந்தன. அதே நேரம், இசிஇ, கம்ப்யூட்டா் சயின்ஸ், ஐ.டி. ஆகிய பாடப்பிரிவுகளை மாணவா்கள் அதிகம் விரும்பியிருந்தனா். இதையடுத்து, காலியிடங்களுக்கு துணைக் கலந்தாய்வு மூலம் மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பப் பதிவு தொடக்கம்--- ஜூலை 26

விண்ணப்பிக்க கடைசி நாள்----- ஆக. 24

சமவாய்ப்பு எண் வெளியீடு---- ஆக. 25

தரவரிசைப் பட்டியல் வெளியீடு----- செப். 4

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு---- செப். 7 முதல் செப். 11

பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு--- செப்.14 முதல் அக். 4

துணைக் கலந்தாய்வு---------- அக். 12 முதல் அக். 16.

எஸ்.சி.ஏ., எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வு அக்.18 முதல் அக். 20.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com