பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்: நாள்தோறும் ரூ.5 கோடி பின்னலாடை உற்பத்தி பாதிப்பு

திருப்பூரில் பவர் டேபிள் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் நாள்தோறும் ரூ.3 முதல் ரூ.5 கோடி வரையிலான பின்னலாடை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கம் செயலாளர் நந்தகோபால்,  தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கம் செயலாளர் நந்தகோபால்,  தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர்.

திருப்பூர்: திருப்பூரில் பவர் டேபிள் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் நாள்தோறும் ரூ.3 முதல் ரூ.5 கோடி வரையிலான பின்னலாடை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் பவர் டேபிள் தொழிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பவர் டேபிள் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி புதன்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளர் நந்தகோபால்,  தலைவர் நாகராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

திருப்பூரில் பவர் டேபிள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்படும் தையல் இயந்திரங்கள்.

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பவர் டேபிள் உரிமையாளர்களுக்கு 2016 இல் போடப்பட்ட ஒப்பந்தம் 2020 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. 

இதைத்தொடர்ந்து, தற்போது ஊதிய உயர்வு, நூல் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் இந்தத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சைமா சங்கத்திடம் பல கடிதங்கள் எழுதியுள்ளோம். அதற்கு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்புதான் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங் முடியும் என்று திரும்பத் திரும்ப கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் 2 ஆயிரம் நிறுவனங்களில் பணியாற்றும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தினசரி ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையில் பின்னலாடை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

திருப்பூரில் பவர் டேபிள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்படும் தையல் இயந்திரங்கள்.

ஆகவே, சைமா சங்கத்தின் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றனர். இந்தசந்திப்பின்போது, துணைத் தலைவர் பொன்சங்கர், துணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

திருப்பூரில் பவர் டேபிள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்படும் தையல் இயந்திரங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com