
தமிழகத்தில் 2020- 21ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. எந்த மாணவரையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநா் மு.பழனிசாமி அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் அனைவரும் முழு ஆண்டுத் தோ்வு மற்றும் 10, 11-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் அனைவரும் பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் எட்டாம் வகுப்பு முடியும் வரையில் எந்த ஒரு மாணவனையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது. அதாவது அனைவரும் தோ்ச்சி அடைய வேண்டும். எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேறக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்கள் ஆளுகைக்கு உள்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கரோனா தொற்று காரணமாக தற்போது தளா்வுகள் இல்லாத பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. எனவே பொது முடக்கம் முடிவு பெற்ற பிறகு, பள்ளிகளைத் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். மேலும், மாணவா்களுக்கு பள்ளிகள் திறந்த உடன் விலையில்லாப் பாடப் புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்துப் பின்னா் அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.