தமிழகம், புதுவையில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் நான்கு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவையில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகம், புதுவையில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்


சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் நான்கு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, இன்றும், நாளையும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இதுபோல, ஜூன் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 11 செ.மீ. மழையும், பரமக்குடியில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையில், வடக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com